தாயிழந்த
பிள்ளையென
செடிதந்த
தஞ்சமதை
உயிர்கொள்ளப்
பிழையாக
களவாடி
இலையுண்டே
நாணத்தினால்
நானெனக்கு
சிறுகூட்டுச்
சிறைசெய்து
தண்டனையாய்
உள்வறுந்தி
உணவருந்தா
ஓகத்தினால்
கலைவண்ணச்
சிறகுடனே
தேவதையாய்
சிறைமீண்டு
செடிதோரும் முத்தமிட்டேன்…
-ஆரன் 28.06.2021
0 comments:
Post a Comment