மூவேழில் அடிதுவக்கும்
முன்தவத்தின் நற்பயனே
பெண்ணுருவில் என்னுருவே
பின்னேறும் இளையோரை
முன்னேராய் வழிநடத்தி
வாழ்வுதனில் முன்னேற
வாசல்மழை வாசனைபோல்
ஆழ்மனதை ஊடுருவும்
இணையில்லா தமிழ்போல
பேரின்ப வாழ்வுதனை
சீரோடு வாழ்ந்திடவே
வாழ்கவென வாழ்த்துகிறேன்.
-ஆரன் 16.09.2020
( மகளுக்கு பிறந்த நாள்
வாழ்த்துக் கவிதை )
0 comments:
Post a Comment