மாதங்களில் நோன்பிருந்து
புத்தகநீர் அருந்திடுவாய் !
கண்களிலே உலகருந்தி
பயணப்பசித் தீர்த்திடுவாய்!
பெற்றவையும், கற்றவையும்
பின்வாழ்வில் தெம்பளிக்கும்!
சிவா சிவா எனக்கேட்டால்
வாசி வாசி என்ரொலிக்கும்!
முதலெழுத்துத் தந்தவரே
நலம்வாழ விழைகின்றோம்!
எக்காலும் நின்பெயரை
அழுக்காறு இல்லாமல்!
கடையெழுத்தில் பெருமைப்பட
முக்காலும் முயல்கின்றோம்!
-ஆரன் 12.01.2021
( நண்பருடைய மகளும் மகனும் அவர்கள் தந்தை பிறந்த நாளுக்காகக் கேட்டக் கவிதை )
0 comments:
Post a Comment