மலையரசி தந்தமகள்
மனந்தெளியும் காலமிது
ஞாலம்நின் பேருரைக்கும்
தலைநகரில் நட்டதமிழ்-
செல்வமகன் உடனிருக்க
சேர்த்தகனா நாள்வருமே
உன்னுயரம் நீயறிவாய்
துயரெல்லாம் காலடியே
பிறரறியா உன்சிந்தை
சிந்துநதி பாய்ந்திடுமே
நித்தம் தனையாழும்
மாரிகுல பெண்மணியே…
-ஆரன் 17.09.2020
(டெல்லி நண்பர் மறைவுக்கு அவர் மனைவிக்கு எழுதிய கவிதை )
0 comments:
Post a Comment