பன்னீர்ப் பூவே
நன்னீர்த் தீவே
கோகிலத்துப் பாவே
மலைமேகக் காவே
சிற்றின்ப நிறையே
பேரின்பச் சிறையே
பனிதாங்கா உளமே
உளிதாங்கும் திடமே
தாலாட்டு நாளின்று
வாழ்வாங்கு வாழ்ந்திடவே
உன்பாதி சேய்களுடன்
இயற்கையன்னை உடனிருப்பாள்
இறுதிவரை இன்புறவே…
( மனைவி பிறந்த நாளுக்கு எழுதிய
கவிதை )
0 comments:
Post a Comment